படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது இதனால் உக்ரைனிலிருக்கும் அவர்களை உடனடியாக வெளியேறும படி அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது.

மேலும் நேற்று முன்தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போலந்து நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த போர் தற்போது தீவிரமடைய தொடங்கியிருக்கிறது.

ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்த ரஷ்யா தற்சமயம் பொதுமக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உக்ரேனில் படித்துக்கொண்டிருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரஷ்ய ராணுவ படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதனால் அதற்கு விளக்கம் கேட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதரகங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

எதற்காக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது என்று கேட்டால் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட இரு நாடுகளும் ஒரே பிராந்தியமாக இருந்தவை தான்.

ஆனால் உக்ரைன் தனியாக பிரிக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம் நேட்டோ என்று சொல்லப்படக்கூடிய நேச நாடுகள் பட்டியலில் உக்ரைன் இணைவதற்கு ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.

ஆனாலும் உக்ரைன் நேட்டோ அமைப்பில் இடம்பெறுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இது ரஷ்யாவை ஆத்திரமூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்கா நீதித்துறை ரஷ்ய தன்னலகுழுக்களின் குற்றங்களை கண்காணிக்க ஒரு பிரத்தியேகமான பணிக் குழுவை கூட்டி வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாங்கள் அமெரிக்காவுக்கு ஏனைய மக்களுடன் துணை நிற்கிறோம். அமெரிக்காவும் நம்முடைய நட்பு நாடுகளும் நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நம்முடைய கூட்டு சக்தியின் முழு பலத்துடன் பாதுகாக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

உக்ரேனிய மக்கள் தூய்மையான தைரியத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். விளாடிமிர் புட்டின் போர்களத்தில் லாபங்களை பெற்றுவிடலாம். ஆனாலும் நீண்ட காலத்திற்கு அவர் தொடர்ந்து அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ரஷ்யாவை மறைமுகமாக எச்சரிக்கை செய்திருக்கிறார் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க நீதித்துறை ரஷ்ய தன்னல குழுக்களின் குற்றங்களை கண்காணிப்பதற்காக ஒரு பிரத்தியேக குழுவை கூட்டி வருகின்றது. உங்களுடைய படைப்புகள், உங்கள் சொகுசு குடியிருப்புகள், உங்களுடைய தனியார் ஜெட் விமானங்களை கண்டுபிடித்து கைப்பற்ற எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் நாங்கள் இனைகின்றோம் என தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

அனைத்து ரஷ்ய விமானங்களுக்கும் அமெரிக்கா வான்வெளியை பயன்படுத்துவதற்கு நாங்கள் தடை விதித்திருக்கிறோம். எங்களுடைய கூட்டு நாடுகளுடன் ஒன்றிணைவோம் நம்முடைய பொருளாதாரம் கடந்த வருடம் 6.5 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கியது. முன்பைவிட ஒரு வருடத்தில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

புடின் உக்ரைன் தலைநகர் கீவ்வை ராணுவ டாங்கிகளுடன் சுற்றி வரலாம் ஆனால் உக்ரேனிய மக்களின் இதயங்களை அவர் ஒருபோதும் பெற்று விட மாட்டார் சுதந்திர உலகின் உறுதியை அவர் ஒருபோதும் பலவீனப்படுத்த இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு ரஷ்ய சர்வாதிகாரி ஒரு வெளிநாட்டை ஆக்கிரமித்ததால் உலகம் முழுவதும் செலவு அதிகரித்திருக்கிறது. ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான போரில் ஜனநாயகம் தற்சமயம் உயர்ந்து நிற்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.