கூட்டு பாலியல் செய்த குற்றவாளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Sakthi

இந்தியாவில் பல விதமான சட்ட திட்டங்கள் இருந்தாலும் கூட தவறுகள் பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை. அதிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரையில் அனைத்து விதமான தவறுகளும் நடக்காத வண்ணம் இருக்குமளவிற்கு சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இருந்தாலும் கூட அவை செயல்படாத சம்பிரதாயமாகவே இருந்து வருகிறது.

அந்த சட்டங்கள் பெரிய அளவில் செயல்படாததன் நீழ்ச்சியாகத்தான் தற்சமயம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜஸ்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஷிவ் சிராஜித் ராம் என்பவர் கடந்த 2008ஆம் வருடம் கடந்த 3 கூட்டு பாலியல் வன்கொடுமைகளில் முக்கிய குற்றவாளி என சொல்லப்படுகிறது.

காவல்துறையை சேர்ந்தவர்கள் இவரை கைது செய்யவிருந்த சூழ்நிலையில், அவர் திடீரென்று தலைமறைவானார். அதன் பிறகு அவர் காவல்துறையினர் கண்களில் சிக்கவில்லை இந்த சூழ்நிலையில், பூரண நகர் பகுதியில் ஆயுதம் வைத்துக்கொண்டு ஒருவர் இடையூறு கொடுப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற காவல்துறையை சேர்ந்தவர்கள், அந்த நபரை கைது செய்தார்கள். கோட்வாலி காவல்நிலைய ஆய்வாளர் எல் எஸ் துருவே கைதானவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியடைய வைக்கும் உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன.

அதாவது, தற்போது கைது செய்யப்பட்டவர் கடந்த 2008ஆம் வருடம் 3 கூட்டு பாலியல் வன்கொடுமைகளில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பது உறுதியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை சட்டத்துடன் சேர்த்து ஆயுதத் தடுப்பு சட்டத்தின்படியும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள்.

கடந்த 2008ஆம் வருடத்தில் குற்றம் செய்த ஒருவர் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் அவர் எங்கிருந்தார்? அதே மாவட்டத்தில் தான் இருந்தாரென்றால் அவரை காவல் துறையைச் சார்ந்தவர்கள் எப்படி கைது செய்யாமல் விட்டார்கள் என்று பல கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.