தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

Photo of author

By Hasini

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

Hasini

JP Natta appoints him as Tamil Nadu BJP leader!

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமித்தத்தில் இருந்து தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்த்தெடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

அதிமுக கூட்டணியில் இருந்த போதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்து, சென்றும் வந்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 43 புதிய மத்திய மந்திரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.  இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மத்திய இணை அமைச்சராக எல். முருகன் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் இருந்து வந்த நிலையில் தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுவதனை வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.