Manipur: தற்போது மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் வன்முறைக்கு முன்னாள் காங்கிரஸ் அரசே காரணம் என ஜெ.பி நட்டா தெரிவித்து இருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்தது போலவே தற்போது கலவரம் வெடித்துள்ளது. அங்கு ஒரு சில நாட்களுக்கு முன் முதல்வர் வீடு மற்றும் 13 எம்.எல்.ஏக்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இது மணிப்பூர் மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தியது.
எனவே ஆளும் பாஜக அரசு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வர இந்திய துணை ராணுவத்தினர்களை அனுப்பி வருகிறது.இந்த நிலைக்கு காரணம் ஆளும் பாஜக என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் அதை போல பாஜகவும் காங்கிரஸ் மீது மாற்றி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் சமூக வலைதளத்தில் தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த செவ்வாய் கிழமை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் மணிப்பூர் நிலவும் வன்முறை சூழலை கட்டுக்குள் கொண்டு வர அரசு தலையிடல் வேண்டும் என்று எழுதி இருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.பி நட்டா கடிதம் எழுதி இருக்கிறார். அதில் 20 வருடங்களுக்கு முன் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட சமூக பிரச்சனைக்கு முறையான தீர்வு காங்கிரஸ் கொடுக்காததால் தான் அது இன்று வரை நீடிக்கிறது என தெரிவித்து இருந்தார்.