V. SENTHIL BALAJI: திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாமின் வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று(ஆகஸ்ட்20) மாலை தீர்ப்பு வழங்கவுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி ஆவார். போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் பொழுது வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமலாக்கத்துறை கையில் எடுத்தது.
இதையடுத்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை தற்பொழுது திமுக கட்சியின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை கடந்த ஆண்டு கைது செய்தது. ஒரு வருடமாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஜாமின் கேட்டு பல முறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இருப்பினும் நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஜாமின் மனுக்களும் இரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்பொழுது ஜார்கண்ட் மாநில முதலமைச்சருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி அவர்களுக்கும் ஜாமின் வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி அவர்களின் ஜாமின் வழங்கு நீதிபதிகள் அபய், எஸ் ஓஹா அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை, இதன் சார்பாக ஆஜரான வக்கீல் தமிழக அரசு, சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு உதவி வருவதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து நீதிபதி அவர்கள் டெல்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார். அப்போது டெல்லியின் முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்களுக்கு அளித்த தீர்ப்பு மாதிரியே செந்தில் பாலாஜிக்கும் ஜாமின் வழங்க முடியம் அல்லவா? என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 14ம் தேதி மத்திய சொலிசிட்டர் ஜென்ரல் அவர்கள் இதற்கு நாங்கள் ஆகஸ்ட் 20ம் தேதி தங்களுடைய முடிவை கூறுவோம் என்று கூற இதை ஏற்ற உச்சநீதிமன்றம் வழக்கை இன்று அதாவது ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதையடுத்து இன்று(ஆகஸ்ட்20) காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது. அப்பொழுது மத்திய சொலிசிட்டர் ஜென்ரல் அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆகும், எனவே வழக்கை இன்று(ஆகஸ்ட்20) நாள் முடியும் பொழுது விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து நீதிபதிகள் இனியும் காலம் அவகாசம் கொடுக்க முடியாது. செந்தில் பாலாஜி அவர்களின் ஜாமின் வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ள நிலையில் இன்று மாலை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் என்று தெரிகின்றது.