அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜூலை மாதம் 16ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்ற பொதுக்குழு கூட்டம் குறித்து திங்கள்கிழமை மாலைதான் தனக்கு தகவல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
2432 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க விருப்பம் தெரிவித்திருகிறார்கள் என்றும், பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர மற்ற நிவாரணங்களை கேட்கலாம் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்தார்கள் பன்னீர்செல்வம் தன்னிடம் தெரிவிக்காமல் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்க முடியாது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தது.
கட்சியின் நலனுக்காக வழக்கு தொடர்வதாக தெரிவிக்கும் பன்னீர்செல்வம் தனக்கு பாதிப்பு உண்டாகும் என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே பன்னீர்செல்வத்தின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இடைக்கால பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து பன்னீர்செல்வம் பரப்பு தன்னுடைய வாதத்தில் இரண்டு பதவிகளும் காலியாக இருப்பதாக முன்வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல கட்சி நிறுவனர் எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி என்னானது என்பது தொடர்பாக எடப்பாடி தரப்பு தன்னுடைய மனுவில் விளக்கமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தரப்பு வாரங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி வரும் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் பொதுக்குழு கூட்டம் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வழக்கை தள்ளி வைத்தார். அன்று காலை 9:15 மணியளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், 9:00 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது.