தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை!

0
177

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறார்கள். நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது


சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் வரை உயரமாலிருந்த இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மே மாதம் இரண்டாம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மே மாதம் 4ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 99 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வந்த ஆபத்து மத்திய! மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்!
Next articleநோய்த்தொற்று பரவல் காரணமாக சிறிது காலம் பொறுத்து தான் ஆக வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here