பெட்ரோல் டீசல் விலை! நிம்மதி பெருமூச்சு விடும் வாகன ஓட்டிகள்!

Photo of author

By Sakthi

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் என்னையும் செய்துவருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் அந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தான் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. பெட்ரோல் ஒரு லிட்டர் 96 ரூபாய் 23 காசும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசுகள் விற்பனை ஆகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.