பெட்ரோல் டீசல் விலை! மனமிரங்கிய எண்ணெய் நிறுவனங்கள்!

0
183

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக இருந்த போது முடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுதல் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 14 காசுகள் டீசல் ஒரு லிட்டர் 92 ரூபாய் 31 காசுக்கு விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதிமுக ஆட்சி தமிழகத்தின் இருண்டகாலம்! முன்னாள் அமைச்சர் தெரிவித்த அதிரடி கருத்து!
Next articleசென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here