ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வரும் நோய் தொற்று நோய் பரவல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஆரம்பித்தது தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, 17 கோடியே 92 லட்சத்து 58 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நோய்த்தொற்று பரவல் காரணமாக, 3,882,091 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிப்படைந்து இதுவரையில் 16 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 590 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்சமயம் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது.
இந்த சூழ்நிலையில், நாட்டின் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 256 பேருக்கு இந்த தொடர் பரவல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நோய்தொற்று பாதிப்பால் 1422 பேர் பலியாகி இருக்கிறார்கள். நாட்டில் நோய் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 821 ஆக அதிகரித்திருக்கிறது.
நோய் தொற்றிலிருந்து நலம் பெற்றோரின் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 ஆக உயர்ந்து இருக்கிறது. நோய் தொற்று காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக அதிகரித்திருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.