சேலத்தில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது பனியன் கம்பெனி முழுவதும் நாசமாகியிருக்கிறது. நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைகளில் காற்று மாசு மற்றும் தீ விபத்துகளை குறைத்திட பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்து இருந்தது.
அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இருப்பினும் நேற்று பல்வேறு இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது. சேலம் மாநகர எல்லை பகுதியான பில்லுக்கட்டை கேட் பகுதியில் அமைந்துள்ள பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜகதிஷன் என்பவருக்கு சொந்தமான “மகேந்திரன் பனியன்கள்” என்ற பெயரில் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது.
இந்த கம்பெனியில் மொத்த வியாபாரத்திற்கு பனியன் இருப்புகள் வைக்கப்பட்டு இருந்த உள்ளது. நேற்று சுமார் மாலை 6 மணி தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பனியன் கம்பெனி முழு எரிந்து நாசமாகியிருக்கிறது. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் மீட்பு பணியில் இருந்தார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை பட்டாசு வெடித்தால் தீ விபத்து ஏற்பட்ட இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.