சற்று முன்: நாடாளுமன்ற புதிய சபாநாயகராக இரண்டாவது முறையாக ஓம் பிர்லா தேர்வு!!
இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடை பெற்று முடிந்தது.அதில் பாஜகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இதன் மூலம்
மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார்.இதன் பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் நடாளுமன்றத்தின் புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் வரை இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப்பை நியமித்தார்.
இந்த நிலையில் புதிய சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.இதில் பாஜகா சார்பில் ஓம்பிர்லாவும் மேலும் இந்தியா கூட்டணி(congress) சார்பில் கேரளாவை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ்ம் நியமிக்கப்பட்டுள்ளனர்.குரல் வாக்கு எடுப்பின் மூலம் நடைபெற்ற இத்தேர்தலில் ஓம் பிர்லா வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.