சற்றுமுன்: Instagram முடக்கத்தால் பயனர்கள் அதிர்ச்சி!! வெளியான பரபரப்பு தகவல்!!
உலகளவில், மக்கள் அதிகமாக தங்களது செல்போன்களில் பயன்படுத்தும் ஆப்களில் பெரும்பாலும் மெட்டா நிறுவனத்தின் அப்ளிகேசன்களே உள்ளன.அதிலும் குறிப்பாக WhatsApp,Facebook,Instagram போன்றவை மிகவும் பிரபலமானது.தற்போது கூட மெட்டா, WhatsApp-களில் புதிதாக AI மென்பொருளை நிறுவியுள்ளது.இதுபோல நாளுக்கு நாள் புதியதாக Update-களை கொடுத்து கொண்டே வருகிறது.
இதனால், இவர்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.மேலும் பயனர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்குவதற்கு தாங்கள் பல்வேறு மென்பொருட்களை கண்டுபிடித்து வருவதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.இந்த நிலையில் தான் இன்று திடீரென Instagram பயன்படுத்தும் பயனர்கள் தங்களது போன்களில் இன்ஸ்டா ரீல்களை தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை என்று கதறி வருகின்றனர்.
Instagram -மை பொறுத்த வரையில் பல முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகைகள் வித விதமாக நிறைய Post-கள் போடுவார்கள்.அதனை அவர்களின் ரசிகர்கள் Reels-ஆக மறு உருவாக்கம் செய்து மகிழ்வார்கள்.இப்படி பல தரப்பட்ட மக்களையும் கவந்த Instagram மிகவும் குறைந்த அளவிலேயே தரவுகளை தருவதாக பயனர்கள் புகார் கூறி வருகின்றனர்.அதாவது கார்களின் படங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகள் மட்டுமே தொடர்ந்து Insta-வில் நன்றாக இயங்குகிறது என்றும்,இதனால் மற்ற Reels எதையும் தங்களால் காண இயலாததால் வாடிக்கையாளர்கள் தங்களது கண்டனத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த புகார் குறித்து மெட்டா நிறுவனம் எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை .