அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

Photo of author

By Janani

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

Janani

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, அங்கு அந்த நாமத்தை ஒழிக்கின்றவர்களுக்கும் பயபக்தியுடன் அந்த நாமத்தை கேட்பவர்களுக்கும் அருள்புரிய கூடியவர் தான் ஆஞ்சநேயர். மாருதி, அனுமன், அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் இப்படி எல்லாம் பல பெயர்கள் இருந்தாலும், ஆஞ்சநேயர் என்ற பெயரை நாம் சொல்லும் பொழுது அதில் உள்ள கம்பீரம் நமக்கு தெரிகின்றது.

பலவிதமான அற்புதப் பலன்களை நமக்கு அள்ளித் தரக்கூடிய அந்த அனுமனின் வழிபாடு என்பது காரிய தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும். இன்றைய உலகில் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து காணப்படுகிறது. அதனை நீக்குவதற்கு அனுமனின் மந்திரம் ஒன்றே போதும்.

இருள் அதிகமாக சூழும் சமயத்தில் தான் துஷ்ட சக்திகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இருள் அதிகமாக சூழ்ந்திருக்கும் அமாவாசை தினத்திலும் கெட்ட சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இதன் அடிப்படையில் உங்களுடைய வீட்டில் ஏதேனும் துர்சக்திகளால் பிரச்சனைகள் இருந்தால், வீட்டில் இருப்பவர்கள் துர் சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வரும் அமாவாசை நாளில் அனுமனது இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுடைய துன்பங்கள் உங்களை விட்டு சீக்கிரமாக விலகும்.

வீட்டில் யாரேனும் கெட்ட சக்தியால் பாதிக்கப்பட்டு, பிரம்மை பிடித்தது போல இருக்கிறார்கள் என்றாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அல்லது துஷ்ட சக்திகளின் ஆதிக்கத்தால் ரொம்பவும் ஆக்ரோஷமாக இருப்பவர்களை அடக்குவதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இன்றைய தினம் 29-3-2025 இந்த அமாவாசை திதியோடு சூரிய கிரகணமும் வரவிருக்கிறது. சனி பெயர்ச்சியும் நடக்கவிருக்கிறது. ஆக இந்த நாள் அதிசக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இன்று சூரிய உதயத்திற்கு பிறகு முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் முடித்துவிட்டு, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இந்த மந்திரத்தை படியுங்கள்.

இல்லையென்றால் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் இந்த மந்திரத்தை கூறலாம்.

“அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ரும்ஹ சாரிணம் துஷ்ட க்ரஹ வினாசயா ஹனுமந்த முபாஸ் மஹே!”

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிறகு பாதிக்கப்பட்டவர்களால் இந்த மந்திரத்தை படிக்க முடியும் என்றாலும் படிக்கலாம், அல்லது பாதிக்கப்பட்டவர்களை பூஜை அறையில் அமர வைத்துவிட்டு, மற்றொருவர் இந்த மந்திரத்தை படித்து பாதிக்கப்பட்டவருடைய காதுகளில் இந்த மந்திரம் விழும் படி செய்யலாம்.

அனுமனை நினைத்து இந்த மந்திரத்தை அமாவாசை தினத்தன்று படித்தால் தீய சக்திகளில் இருந்து விடுபடக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.சனிக்கிழமை மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி எவர் ஒருவர் இந்த மந்திரத்தை படிக்கிறார்களோ, அவர்கள் உடம்பில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, அவர்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, உடனடியாக வெளியேறும்.