ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

Photo of author

By Janani

ஆறு முறை இதைக் கூறினால் போதும், முருகனின் அருளால் அடுத்த நாளே உங்களது வாழ்க்கை மாறும்..!!

Janani

தினமும் கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், திருப்புகழ் என்று முருகனுக்கு உரிய நாமங்களை மட்டுமே பாராயணம் செய்யும் முருக பக்தர்களை விட, எவர் ஒருவர் மனம் உருகி ஒவ்வொரு நொடிப் பொழுதும் முருக பக்தியில் மூழ்கி இருக்கிறாரோ அவருடனே முருகன் இருக்க ஆசைப்படுவார். இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவ யாருமே இல்லை என்று கண்ணீர் விட்டு கதறும் பொழுது “நான் இருக்கிறேன்” என்று ஓடோடி வருபவர் தான் கந்தன்.

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும்.

நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். அதேபோன்று இந்த ஒரு மந்திரத்தை ஆறு முறை கூறுவதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையே மாறிவிடும்.

“ஓம் முருகா போற்றி!
கந்தா போற்றி! கடம்பா போற்றி!
கதிர்வேலா போற்றி! ஆறுபடை வீடு கொண்ட முருகப் பெருமானே போற்றி! என் செல்லப் பிள்ளையை போற்றி!”

இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை கூறினாலே போதும், உங்களுடைய வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும். நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், துன்பங்கள் அனைத்துமே கடந்து விடும். நீங்கள் இதுவரை இழந்ததை விட வலிமையான ஒன்றை முருகப்பெருமான் உங்களுக்கு ஒதுக்கி இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தாண்டி செல்லக்கூடிய மனவலிமை உங்களுக்கு கிடைக்கும். எதிரிகள் அனைவரும் விலகி சென்று விடுவார்கள். அதேபோன்று இந்த ஒரு மந்திரத்தையும் இரவு தூங்குவதற்கு முன்பு ஆறு முறை கூறினால் முருகன் அருளால் கிடைக்கக்கூடிய பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.

“ஓம் பாலசுப்பிரமணிய
மஹா தேவி புத்ரா
சுவாமி வரவர சுவாஹா!”

இந்த ஒரு மந்திரத்தை இரவு தூங்குவதற்கு முன்பு ஆறு முறை கூறிவிட்டு தூங்கினால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும் மறுநாள் நல்லதொரு திருப்பமாக உங்களுக்கு அமையும்.