திமுக – விசிக கூட்டணியில் பிளவு ? தொண்டர்களின் கேள்வி: வெறும் இரண்டு சீட்டு தானா !!

0
181
Just two seats? Dissatisfaction with the VC workers... Is there a crack in the DMK?
Just two seats? Dissatisfaction with the VC workers... Is there a crack in the DMK?

DMK VSK: காலை முதலே திருமாவளவன் கூறிய செய்தி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, “நான் இரண்டு சீட்டுக்காக திமுக-வின் பின்னால் ஓடுவதாக என்னை விமர்சிக்கிறார்கள், ஆனால் அந்த இரண்டு சீட்டை கூட சிலரால் வாங்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

திமுக-வுடனான கூட்டணியில் நீண்ட காலமாக இணைந்து பயணம் செய்துவரும் திருமாவளவனின் கட்சிக்கு மிகக் குறைவான சீட்டுகள் வழங்கப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, தன்னுடைய கட்சியின் வலிமையை முன்னிறுத்தி கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கி வருகிறது. இதுவே “முதன்மை கட்சி – துணைக் கட்சி” என்பதை தெளிவாக காட்டுகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெறும் துணைக் கட்சி அல்ல. குறிப்பாக, தென் மாவட்டங்களில் திமுக-வுக்கு அதிக வாக்கை பெற்று தரும் அளவுக்கு உயர்ந்துள்ளது. திருமாவளவன் திமுக-வின் பின்னால் நிழல் போல நடக்கிறார் என்று மக்கள் மத்தியில் நிலவும் விமர்சனத்தை முறியடிக்க விரும்புவதால் தான் திறந்தவெளியில் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

“வெறும் இரண்டு சீட்டுக்காக விமர்சிக்கப்படுகிறேன்” என்ற அவரது குற்றச்சாட்டு, திமுக-வி.சி.க கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது. திருமாவளவனின் இந்த கருத்து அவர் கூட்டணியில் தொடர்ந்தாலும், தனது கட்சியை முன்னிலைப் படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்வார் என்பதும் தெளிவாகிறது. இல்லையெனில், அவர் வெளியேறுவாரா என்ற சந்தேகமும் எழுகிறது.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவிடம் திருமாவளவன் அதிக சீட்டுகள் கேட்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த கோரிக்கைக்கு திமுக எப்படி பதிலளிக்கிறது என்பதை பொறுத்தே கூட்டணி தீர்மானிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இது 2026 தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

Previous articleஅன்புமணியா? ராமதாஸா? தொடர்கிறது பா.ம.க விரிசல்!!
Next articleஅரசியலில் சென்டிமென்டை உருவாக்கும் விஜய்.. எம்.ஜி.ஆர்-யை முன்னிலைப்படுத்தி அரசியலா?