திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடந்தோறும் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 19ஆம் தேதி ஆரம்பமானது. முதல் நாளில் சத கலச ஸ்தாபனம் மற்றும் மகா சாந்தி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. அதன்பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம்,ஸ்பைன திருமஞ்சனம் நிகழ்த்தினார்கள்.
பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் சுவாமியின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கவசம் அணிவிக்கப்பட்டது. மாலையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜன் திருவீதி உலா வந்தார்கள்.
இரண்டாவது தினமான நேற்று முன்தினம் சத கலச ஸ்னாபனம் மகா சாந்தி ஹோமம் ஸ்நபன திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிந்தராஜ சாமியுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் திருவீதி உலா வந்தார்கள் இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்கள்.