இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

Photo of author

By Hasini

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

Hasini

Jyotika started an account on Instagram! Millions of followers!

இன்ஸ்டாவில் கணக்கை தொடங்கிய ஜோதிகா! இலட்ச கணக்கில் பின்தொடர்பவர்கள்!

தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. அவர் நடிகை நக்மாவின் தங்கையும் ஆவார். அவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகர் சிவகுமார் வீட்டு மருமகளாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு மற்ற பெண்களை போல் அல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். அவருக்கு சூர்யாவும் மிகவும் உறுதுணையாகவும், உதவியாகவும் இருப்பதாக  பேட்டிகளில் கூட சொல்லி இருக்கிறார்.

சூர்யா ஒரு பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அதன் பெயர் 2D இன்டர்நேஷனல் என்பதாகும். இவரது படங்களை எல்லாம் இந்த நிறுவனமே தயாரிக்கிறது. 36 வயதினிலே, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் போன்ற படங்களில் நடித்த ஜோதிகா தற்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில், உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்துக்கொண்டே பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். அதை அவரது கணவரும் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். அதில் தேசியக் கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும் புகைப்படங்களை, பதிவிட்டு உள்ளார். இரண்டு இலட்சம் பேருக்கு மேல் அவரது பக்கத்தை விரும்பியுள்ளனர். மேலும் ஜோதிகா இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரை மட்டும் 14 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் இரண்டு பேர் கோடி கூட பின் தொடர்வார்கள் என்றும் ராஷ்மிகா பந்தனாவையே முந்தி ஜோதிகா முதலிடத்தில் இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. கணவன் மனைவி என்றால் இப்படி அல்லவா? இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்காத கணவன் கிடைக்க அவர் என்ன தவம் செய்தாரோ? இந்த ஜோடியை பிடிக்காத நபர்களே இருக்க மாட்டார்கள்.