Breaking News

பீரங்கியாக வெடித்த ஜோதிமணி ட்வீட்.. அதிர்ந்து போன செல்வப்பெருந்தகை.. காங்கிரஸில் புதிய திருப்பம்..

Jyotimani's tweet exploded like a cannon.. Selvaperunthakai was shocked.. a new turn in Congress..

CONGRESS: பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்ததாக தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது என்றே சொல்லலாம். திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் இம்முறை விஜய் வருகையால் சற்று தடம் மாறி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. விஜய் காங்கிரசுக்கு மிகவும் நெருக்கம் என்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியதாலும் காங்கிரஸ்-தவெக கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ் தொடரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து மீண்டும் காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு அச்சராமிட்டார்.

இவ்வாறு ஆட்சி பங்கிற்காகவும், அதிக தொகிகளுக்காகவும் விஜய்யுடன் சேரும் போக்கை காங்கிரஸ் காட்டி வந்ததால் திமுக தலைமை மிகவும் அதிருப்தியில் இருந்து வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தான் விஜயுடன் கூட்டணி சேர வேண்டுமெனவும், திமுக கூட்டணியில் தான் தொடர வேண்டுமெனவும் தமிழக காங்கிரசில் சலசலப்பு நிலவியது. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் திரைமறைவில் சில கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல் பரவியது. தற்போது இதனை கரூர் எம்.பி ஜோதிமணி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். தமிழக காங்கிரசில் நிலவும் சச்சரவு குறித்து கருத்து பதிவிட்ட அவர், தமிழ்நாடு காங்கிரசில் எந்தவித கட்டுபாடுமற்று தொடரும் உட்கட்சி பிரச்சனைகள் மிகுந்த மனசோர்வை ஏற்படுத்துகிறது என்றும் தமிழக காங்கிரஸ் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எனவும்  பல்வேறு கருத்துகளை வெளிபடுத்தியுள்ளார்.

இவரின் இந்த கருத்துக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, கரூர் தேர்தல் படிவம், முகவர் நியமனம் போன்றவற்றில் பிரச்சனை இருந்தது உண்மை தான். இது குறித்து மேலிடத்திற்கு தெரியப்படுத்தியும் இன்னும் பதில் வராத நிலையில் ஜோதிமணியின் இந்த கருத்து ஆச்சரியமளிக்கிறது என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இவ்வாறான நிலை நிலவுவது அதன் நிலைமையை கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.