சவாலே சமாளி என்ற படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். சிவாஜி மற்றும் ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மாபெரும் ஹிட்.
கண்ணதாசன் போல கவிஞர்களை பார்ப்பது அரிது. தன் சொந்த சோக கதைகளை பாட்டில் எழுதுவார் என்பது தெரியும்
அதேபோல் மற்றவர்களின் சோக கதையும் பாட்டு எழுதுவார் என்பது தெரியும். அவ்வாறு எழுதப்பட்ட இந்த பாடல் தான் மாபெரும் ஹிட் ஆனது. அவர் எழுதினாலும் அந்த கதைக்கு அது ஒத்துப் போய் இருக்குமே தவிர மாறாக இருக்காது.
அப்படியே ஒரு நாள் திரு நீலகண்டன் இயக்குனர் அவர்களும் கண்ணதாசன் அவர்களும் காரில் சென்ற பொழுது திருநீலகண்டன் அவர்கள் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது அதனால் என்னை தொடாதே என்று என் மனைவி என்னிடம் சொல்லிவிட்டால் என்று சொல்லி உள்ளார்.
பாடல் எழுதும் பொழுது சுச்சுவேஷன் கணவன் மனைவி சண்டை என்று கண்ணசாசனுக்கு விளக்க, கண்ணதாசன், நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே என்று ஆரம்பித்து புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமையல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தான் அது
“திருநீலகண்டனின் மனைவி சொன்னது” என்று சிவபெருமானையும் பார்வதியை கனெக்ட் செய்வதுபோல் அந்த படத்தின் டைரக்டர் “திருநீலகண்டனின் மனைவி சொன்னது” என்று டைரக்டருக்கு மட்டும் புரியும்படி எழுதி அசத்தினார்.