தென்காசி:
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதியில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
இந்நிகழ்வில் வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் கே.முரளி , நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சேக் தாவூத் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரூர் செயலாளர் இலியாஸ், வடகரை பேரூர் கழக திமுக செயலாளர் தங்கப்பா, திமுக பேரூர் கழக பொருளாளர் அருணாச்சலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.