Kadhal Konden Sudeep: கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல் காெண்டேன். இந்த திரைப்படத்தில் நாகேஷ் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள். காதல் கொண்டேன் திரைப்படம் நடிகர் தனுஷூக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றார்.
மேலும் காதல் கொண்டேன் படத்தில் தனுஷூன் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்று இன்றளவும் மக்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்துள்ளது என்றே கூறலாம். மேலும் இந்த படத்தை மக்கள் இன்றளவும் நினைவில் வைத்துக்கொள்வதற்கு மற்றொரு காரணம் அது இந்த படத்தின் இசை தான். காதல் கொண்டேன் படத்திற்கு இசையமைத்தது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட் ஆன நிலையில், ரசிகர்களின் பிளே லிஸ்டில் இன்னும் இந்த படத்தின் பாடல்கள் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் தமிழில் புதுமுக நடிகையாக சோனியா அகவர்வால் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் வரும் மற்றாெரு கதாபாத்திரம் தான் ஆதி. தனுஷுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாக இந்த படத்தில் இவரின் கேரக்டர் இருக்கும். இவரின் உண்மையான பெயர் சுதீப் சாரங்கி. இவர் இந்த படம் வெளியான சமயத்தில் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். காதல் கொண்டேன் வெற்றியை தாெடர்ந்து இவர் தமிழில் என்னவோ புடிச்சிருக்கு, மற்றும் காதலே ஜெயம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.
அதன் பிறகு அவர் இந்தி, பெங்காலி தொடர்களில் நடித்து வந்தார். இவர் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரை பார்த்த நெடிசன்கள் காதல் கொண்டேன் படத்தில் பார்த்த ஆதியா இது என்று ஆச்சரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: 7 வருடங்களாக பாடாத பாடகி ஜானகி அம்மா..! இதுதான் காரணமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. !