காதல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சுகுமார். அந்த படத்தில் சுகுமார் நடித்திருந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக செய்யும் வேலையை மறைத்து தன்னுடன் தங்கியிருப்பவர்களை மட்டம் தட்டி அவர் பேசுவதும் பின்னர் அவர்களிடம் மாட்டிகொண்டு அடிவாங்கும் காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைத்தது.
அதன்பின் பல படங்களிலும் சுகுமார் நடித்திருக்கிறார். விருமாண்டி, அறை எண் 305-ல் கடவுள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பேட்டி ஒன்றில் ‘டிவி நிகழ்ச்சிகளில் வடிவேலுவை போல நடித்து காமெடி செய்து கொண்டிருந்தேன். ஒருமுறை வடிவேலு என்னை அழைத்து ‘என்னைப்போல் ஏன் நடிக்கிறாய்?’ எனக்கேடு அவரின் நண்பர்களோடு சேர்ந்து என்னை தாக்கினார்’ என பரபரப்பு பேட்டி கொடுத்தார். இப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னுடன் வாழ்ந்து நகை, பணம் ஆகியவற்றை பெற்றுகொண்டு ஏமாற்றிவிட்டார் என சென்னையை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் துணை நடிகை அவர். அவருக்கும் சுகுமாருக்கும் பழக்கம் ஆகி நாளடைவில் அவரோடு வாழ துவங்கியிருக்கிறார். ஆனால், சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்களை கழித்ததால் போலீசாரிடம் புகார் அளித்திதார். இந்த வழக்கில் இப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, சுகுமார் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பர்க்கப்படுகிறது.