உங்களுக்கு Time சரியில்லையா? அப்போ கடிகாரத்தை மறந்தும் இந்த இடத்தில் மாட்டி விடாதீர்கள்..!!

Photo of author

By Priya

உங்களுக்கு Time சரியில்லையா? அப்போ கடிகாரத்தை மறந்தும் இந்த இடத்தில் மாட்டி விடாதீர்கள்..!!

Priya

Clock vastu tips in tamil

Clock vastu tips in tamil: பொதுவாக ஒருவர் அவருக்கு எதுவும் நினைத்தது போன்று நடக்கவில்லை என்றால் அவர் கூறும் முதல் வார்த்தை நேரமே சரியில்லை என்று தான் கூறுவார். பெரியவர்களும் சொல்லுவார்கள் என்ன தான் நாம் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வந்தாலும் நேரம் சரியாக இருந்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று. அந்த வகையில் நம் வீட்டில் நமக்கு நேரத்தை காட்டுவது கடிகாரம்.

அந்த கடிகாரம் இருக்கும் இடமும், இருக்கும் திசையை பொறுத்து நம் வீட்டில் நடக்கும் பல நிகழ்வுகளும் அமையும். இந்த பதிவில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டினால் என்ன பலன்கள் என்று (kadikaram mattum thisai in tamil) பார்க்கலாம்.

கடிகாரம் மாட்டும் திசை

வீட்டை வாஸ்து பார்த்து கட்டிவிட்டு வீட்டில் வைக்கப்படும் பொருட்களையும் வாஸ்து பார்த்து உரிய இடம், திசையில் வைத்தால் தான் நம் வீட்டில் நேர்மறையான ஆற்றல்கள் நிலவும். அந்தவகையில் சில கடிகாரத்தில் கண்ணாடி இருப்பதால் அவைகளை சரியான உகந்த இடத்தில் வைக்க வேண்டும். தவறான இடத்தில் வைத்தால் நமக்கு எதிர் மறையான ஆற்றலை ஏற்படுத்தும்.

கடிகாரத்தை மாற்றுவதற்கு உகந்த திசை கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு இந்த திசையில் உள்ள சுவரில் மாட்ட வேண்டும்.

முக்கியமாக தெற்கு திசையில் மாட்ட கூடாது. ஏனெனில் தெற்கு திசை எம திசை என்று அழைக்கப்படுகிறது. அதனால் தெற்கு திசையில் வைத்தால் கடிகாரத்தில் இருந்து வரும் சத்தம் எமதர்மனை எழுப்புவதாக கூறப்படுகிறது.

மேலும் ஓசையுடன் கூடிய எந்த கடிகாரத்தையும் கிழக்கு சுவரில் மாட்டினால் மனநிம்மதி செல்வம் பெருகும்.

மேலும் படிக்க: பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினால் இத்தனை நன்மைகளா?