சர்ப்பதோஷம் உண்டாவதற்கான உண்மையான காரணங்கள் இவைதான்!

0
146

உலகில் பிறப்பெடுக்கும் பலருக்கு தற்போது தோஷங்கள் என்பது இல்லாமல் இருப்பதே அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.

உலகின் ஜனனமாகும் எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி தோஷமே இல்லாத ஜாதகத்தை பார்ப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது.அந்த வகையில், இன்று கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

கால சர்ப்ப தோஷம் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் சர்ப்பங்களை துன்புறுத்தி கொலை செய்தவர்கள், கலவியில் ஈடுபடும்போது பார்த்தவர்கள், களவியலில் ஈடுபடும்போது பிரித்தவர்கள் என்று பல விதமான காரணங்களை தெரிவிக்கிறார்கள், இதில் 10 சதவீத உண்மை இருக்கலாம் என்கிறார்கள்.

தற்போது உலகில் பலகோடி நபர்கள் வாழ்கிறார்கள். இதில் பலருக்கு சர்ப்ப தோஷங்கள் இருக்கின்றன. இதில் பல பேர் சர்ப்பத்தை நேரில் பார்த்திருக்க கூட மாட்டார்கள், ஆனால் எப்படி கால சர்ப்ப தோஷம் உண்டாகிறது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவைகள்தான் கர்மவினைகள் என சொல்லப்படுகின்றன, ஆகவே ஒருவரின் செயல்பாடுகள் காரணமாக கால சர்ப்ப தோஷம் உண்டாகிறது.

அதாவது காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது, நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளை பிரித்து வைப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றி விடுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது.

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது. திருடுவது, கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது.

இல்லாத ஒன்றை வதந்தியாக பரப்புவது, உணவு பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பு செய்வது, பசுக்கள் ,விலங்குகளை, கொலை செய்வது.

இயற்கையை மாசுபடுத்துவது, நோயை பரப்புவது. வீண் வதந்தியை கிளப்பி விடுவது உள்ளிட்ட காரணங்களால் தான் கர்ப்பகால சர்ப்ப தோஷம் உண்டாகிறது என்கிறார்கள்.

Previous articleபடிக்கும் போதே வேலை பார்க்க ரெடியா? உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleபோராட்டத்தில் குதித்த இம்ரான்கான்! ராணுவத்தை களமிறக்கிய பாகிஸ்தான் அரசு!