முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலும் அல்லது கொலை செய்திருந்தாலோ காலச் சர்ப்ப தோஷம் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது.
மேலும் இரண்டு பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது, தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் உண்டாகும்.
இந்த சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுகிறது. லக்னத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து ஏழாவது இடத்தில் தான் கேது அமர்வார் ராசி கட்டத்தில் ஏழாவது இடமானது திருமணத்தைக் குறிக்கும் இதனால் தான் திருமண தடை உண்டாகிறது.
லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது கால சர்ப்ப தோஷம். இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரையில் வாழ்க்கை போராட்ட களமாகவே இருக்கும்.
திருமணம் குழந்தை தொழில் என்று அனைத்து பாக்கியமும் காலம் தாழ்த்தியே உண்டாகும் காலம்தாமதமாக திருமணம் செய்வது நல்ல தீர்வு. தசா புத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது.
பாக்கிய பலன்கள் அதிகரிக்கும், திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.
கால சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபட சில வழிபாடுகள் இருக்கின்றன சிவ வழிபாட்டின் மூலமாக கால சர்ப்ப தோஷத்தை நீக்கலாம். திங்களன்று சிவ பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நன்மை கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி மஞ்சள் மற்றும் குங்குமம் சாற்றி வழிபட்டால் தோஷம் விலகும். மீனாட்சியம்மனை நாள்தோறும் தரிசித்து வந்தால் நன்மை கிடைக்கும்.