இப்போது ரீ-ரிலீஸ் காலம் ஆகிவிட்டது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை இப்போது மீண்டும் வெளியிடுகிறார்கள். ரஜினின் பாபா படம் அப்படி வெளியானது. விஜியின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வசூல் செய்தது. அதன்பின் பல தயாரிப்பாளர்களும் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ஆர்வம் வந்துவிட்டது.
அஜித்தின் சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு போகப்போகிறேன் என அறிவித்துவிட்டதால் அவரின் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து கல்லா கட்டும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
சமீபத்தில் கூட கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்து 2005ம் வருடம் வெளியான சச்சின் படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். கில்லியை போல இப்படம் வசூலை அள்ளவில்லை. ஆனாலும் சச்சின் ரீ-ரிலீஸ் வெற்றி என அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான வெற்றி விழாவில் பேசிய கலைப்புலி தாணு ‘விஜயின் சச்சின் படத்தை தொடர்ந்து அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவின் காக்க காக்க போன்ற படங்களை ரீ-ரிலீஸ் செய்யவிருக்கிறேன். அதேபோல், 2026ல் விஜயின் தெறி மற்றும் ரஜினியின் கபாலி படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.
நிறைய நடிகர்களின் படங்கள் இருந்தாலும், விஜய், அஜித் மற்றும் ரஜினியின் படங்களை மட்டுமே ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். கமல், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்கள் இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.