களத்திர தோஷம் கொண்ட ஜாதகத்தின் நிலை இப்படி இருந்தால் நிச்சயம் திருமணம் செய்யலாம்!

Photo of author

By Sakthi

இன்று ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணம் ஆகும் காலம் தொடர்பாக பார்க்கலாம்

ஒருவருக்கு ஏழாமதிபதி தசா புத்திகள் நடப்பில் இருந்து கோச்சாரத்தில் குரு 7-ஆம் இடத்தை 7ம் அதிபதியை பார்க்கும்பொழுது திருமணமாகும் என சொல்லப்படுகிறது.

மேலும் 2ம் அதிபதியின் தசா புக்திகள் நடைபெறும் காலத்தில் களத்திர ஸ்தானத்தில் குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும்.

எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசை சுக்கிர புத்திகளில் திருமணமாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

ஏழாம் அதிபதி ராகு, கேது, சார நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் ராகு கேதுவின் தசா புத்திகள் திருமணத்தை நடத்திக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.

ஏழாமிடத்தில் ராகு, கேது, இருந்தால் தான் நின்ற களத்திர ஸ்தானத்துக்கு பலன்களை ராகு, கேது, எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள்.

மிக விரைவில் குழந்தை பெற்றுக் கொடுக்கும் அமைக்கக்கூடிய நட்சத்திரத்தை இராகு-கேது பெற்றிருந்தாலும் அந்த காலகட்டங்களிலும் இவருக்கு திருமணம் நடைபெறும்.

களத்திர ஸ்தானாதிபதியின் நட்சத்திர சாரம் வாங்கிய கிரகத்தின் தசா தசாபுத்திகளும் திருமணத்தை நடத்திக்கொடுக்கும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியின் தசா புத்திகளும் சிலருக்கு திருமணம் நடத்திக்கொடுக்கும்.

இந்த விதிகளினடிப்படையில், பெரிய பாதிப்பில்லாத களத்திர தோஷத்திற்கு திருமணம் நடைபெறும் திருமண வாழ்க்கை பாதிப்பை கொடுக்காது.

பெரிய பாதிப்பு இருந்து தசா புத்தியும் சாதகமற்ற நிலையில் உள்ளவர்களுக்கு கால தாமத திருமணம் நடைபெறும், அல்லது திருமணம் நடைபெறாது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.

பரிகாரம்

பொதுவாகவே எந்த விதமான தோஷமாக இருந்தாலும் சரி, அனைத்து காலகட்டங்களிலும் பாதிப்பை கொடுக்காது. தோஷத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா புக்தி காலங்களில் மட்டுமே பாதிப்பை உண்டாக்கும்.

வீரியம் கடுமையாக இருந்தால் திருமணம் நிச்சயமான நாள் முதல் சிறு, சிறு, பிரச்சினைகள் தோன்றி முடிவில் எதிர்பாராத பின்விளைவுகளை கொடுக்கும்.

ஆகவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால் அந்த களத்திர தோஷம் எந்த காலகட்டங்களில் செயல்படும் என்பதை அறிந்து அதற்கேற்ற தசாபுக்தி அமைப்புகளை கொண்ட ஜாதகத்தை இணைக்க வேண்டும் என்கிறார்கள்.

அதாவது திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தது 25 வருடங்கள் முதல் 30 வருடங்கள் வரையில் சாதகமான தசாபுத்திகள் நடைபெற வேண்டும். அதோடு திருமணத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகார முறைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.

களத்திர தோஷமுடைய ஜாதகத்திற்கு அதே அமைப்புடைய ஜாதகத்தை பொருத்துவது தான் நிரந்தர தீர்வு. அதோடு திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதே மிகச் சிறந்த பரிகாரமாக இருக்கும். என்றும் தெரிவிக்கிறார்கள்.