ஜோதிடத்தில் களத்திர தோஷத்தின் சூட்சமம் என்ன?

0
171

ஜாதகத்தில் திருமணத்தை குறிக்கும் பாகங்களான 1,2,7,8 அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது, உள்ளிட்டவை அமர்வது அல்லது ஏழாமிடத்தில் நீசம், அஸ்தமனமடைந்த கிரகங்கள் அமர்வதாகும்.

இந்த தோஷ அமைப்பை கொண்டவர்களுக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே நடக்காத ஒரு நிலை ஏற்படும். அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக, விருப்பமில்லாத ஒருவருடன் வாழ்வது உள்ளிட்ட சூழ்நிலை உண்டாவதற்கான வாய்ப்புண்டு.

இல்லையெனில் சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவில்லாதவர்கள் உடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதி இழப்பது.

அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்துவேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது.

கருத்து வேறுபாடு காரணமாக, நிரந்தரமாக பிரிந்து வாழ்வது, விவாகரத்து பெறுவது, தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்துபோவது போன்ற ஏதாவது ஒரு இடையூறை தந்துகொண்டே இருக்கும் என்கிறார்கள்.

உளவியல் ரீதியாக 1000 ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொண்டால் அதில் 900 ஜாதகத்தில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே செய்கிறது. பலருக்கு களத்திர தோஷம் பாதிப்பு இருந்தாலும் கூட களஸ்திர ஸ்தானம் எனும் ஏழாமிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்றவாறு திருமண வாழ்க்கை அமையும்.

ஏழாமதிபதி நிலையை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்யவேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டுவிட்டால் திருமணம் கேள்விக்குறியாகும். அல்லது சில சமயங்களில் மிக, மிக, தாமதமாக திருமணம் நடைபெறும்.

களத்திர தோஷமுள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும், களத்திர காரகனான சுக்கிரனும், வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. அதேபோல களத்திர தோஷமுள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும், செவ்வாயும், வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.

இதுவே ஜோதிட விதிகளின் சூட்சமம், இந்த சூட்சமத்தை பின்பற்றாமல் ஏழாமிடத்தில் நிற்கும் அசுப கிரகங்களை மையப்படுத்தி களத்திர தோஷம் என்று பலரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது நியாயமா? ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்கிறார்கள்.

அதோடு களத்திரதோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும் ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியமில்லை எனவும், சொல்கிறார்கள்.

Previous articleநீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்!
Next articleபட்டதாரி இளைஞ்சர்களே எஸ்பிஐ வங்கியில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here