தனித் தொகுதியில் போட்டியிட்ட போது இருந்த சாதியை திருமணத்தின் போது ஒழித்து விட்டாரா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ? சமூக ஆர்வலர்கள் விளாசல்

Photo of author

By Ammasi Manickam

தனித் தொகுதியில் போட்டியிட்ட போது இருந்த சாதியை திருமணத்தின் போது ஒழித்து விட்டாரா கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ? சமூக ஆர்வலர்கள் விளாசல்

அதிமுகவின் சார்பாக தனித் தொகுதியான கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் பிரபு. இவர் நேற்று காலை கல்லூரி மாணவி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். அவரது உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லுரி மாணவியான அந்த பெண்ணுக்கு 19 வயதே ஆகிறது. இந்நிலையில் தன்னுடைய பெண்ணை ஏமாற்றி எம்.எல்.ஏ கல்யாணம் செய்து கொண்டதாக பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து விளக்கமளித்த எம்.எல்.ஏ” தான் 10 வருடங்களாக காதலிப்பதாகவும்,முறையாக பெண் கேட்டும் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் எம்.எல்.ஏ சாதி ஒழிப்பு திருமணம் செய்து கொண்டதாக இந்த செய்தி வைரலாகி வருகிறது. அதே நிலையில் இவருக்கு எதிரான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. அதில் குறிப்பாக இவர் 10 வருடங்களாக காதலித்தார் என்றால் பெண்ணுக்கு 9 வயதாகும் போதிலிருந்தே இவர் காதலித்தாரா? என்று பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஏதும் அறியாத இந்த வயதில் குழந்தையாக உள்ள பெண்ணை காதலிப்பது காதலா அல்லது நாடகக் காதலா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் இவர் சாதி ஒழிப்பு திருமணம் செய்துள்ளதாக பதிவிட்டுள்ள நிலையில், அவர் தனித் தொகுதியில் போட்டியிட்ட போது இருந்த சாதியை திருமணத்தின்போது மட்டும் ஒழித்து விட்டாரா? என்றும் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.