கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!!
கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் விசாரணையை முடித்த சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோர்களின் புகாரின் பெயரில் அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், கணிதம் ஆசிரியை கிருத்திகா, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா ஆகிய 5 பேர் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கடந்த 9 மாதங்களாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி காவல் துறையினர் 1200 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று(மே15) தாக்கல் செய்தனர்.