கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக ஐடி பிரிவை சார்ந்த 3 இளைஞர்கள்! மறைமுகமாக செயல்படுகிறதா அதிமுக?

Photo of author

By Sakthi

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடைபெற்ற கலவரம் குறித்து பெரம்பலூரைச் சார்ந்த அதிமுகவின் ஐடி பிரிவை சார்ந்த தீபக். சூர்யா, உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என்று வலைதளத்தில் செய்தி பரப்பிய மூன்று பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தீபக், திருநாவுக்கரசு மகன் சூர்யா, பெரம்பலூர் கம்பன் தெருவை சார்ந்த சுரேஷ் மகன் சுபாஷ், ஆகிய 3 பேரும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என்று சமூக வலைதளத்தில் செய்தி பரப்பியதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்றிரவு இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பெரம்பலூர் நகர காவல் துறையினர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜார் செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.

இதில் தீபக், சூர்யா, உள்ளிட்ட இருவரும் அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.