கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு! மெரினாவில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

கள்ளக்குறிச்சி வன்முறையையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதலான காவல்துறை பாதுகாப்பு பாடப்பட்டிருக்கிறது. பள்ளி சூறையாடலையடுத்து பலர் கைது செய்யப்பட்டார்கள்.

இதை தொடர்ந்து நேற்றைய தினமே சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இன்று சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சிகளை விசாரிப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு விரைந்திருக்கிறார்கள்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பலர் கூடவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இது குறித்து 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனையடுத்து அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.