ரஜினியுடன் இணைவாரா கமல்! வெளியான பரபரப்பு தகவல்!

Photo of author

By Sakthi

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாத காலமே இருக்கின்ற நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னை தயார்படுத்தி வருகின்றனர். கமலஹாசன் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் தன்னுடைய முதல் கட்ட பிரசாரத்தை மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தொடங்க இருக்கின்றார் கமல்ஹாசன்.

இதனிடையே தனியாக போட்டியிடுவதை விட கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்பது பற்றி கமல்ஹாசன் மிகத் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்பதை முன்னரே அறிவித்துவிட்டார் கமல்ஹாசன். அவருடைய மிக நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றுதான் கமல் நினைத்துக் கொண்டிருந்தார். அதனை கருத்தில் வைத்துதான் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.ஆனால் தற்போது ரஜினிகாந்தும் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிவிட்டார். தமிழ்நாட்டின் நலனை கருத்தில் வைத்து இருவரும் ஒன்றிணைவோம் என்று ரஜினியும் கமலும் முன்பே அறிவித்திருந்தார்கள்.

ஆனாலும் இப்போது இருக்கும் நிலையிலே தனியாக போட்டியிட்டு தன்னுடைய பலத்தை நிரூபிக்கவே ரஜினிகாந்த் நினைக்கின்றார் என்ற காரணத்தால், கமல் உள்பட யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் இப்போது கூட்டணி யுகம் என்ற காரணத்தால், கூட்டணி அமைப்பது குறித்து கமல் தீவிரமான ஆலோசனையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டணி அமைப்பதற்கு கமல் முடிவு செய்வாரானால், நாம் தமிழர் கட்சி உடன் இணையலாம் என்ற யோசனைகள் அந்தக் கட்சியில் முன்வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனியாக போட்டியிட்டு சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றன. மொத்தமாக எட்டு சதவீத வாக்குகளை வாங்கியதன் மூலம் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் பலனளிக்கும் என்ற யோசனை இரு கட்சிகளிலும் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவரும் சீமான் கமல் கட்சி ஆரம்பித்த போது நேரடியாகவே வாழ்த்து தெரிவித்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நடுநிலை வாக்குகளை இருவரும் பெற்ற காரணத்தால், தான் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதன் மூலமாக கணிசமான அளவு வாக்குகளை பெற இயலும் என்று இரண்டு கட்சிகளிலும் கருத்துக்கள் உலாவுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முதல் முறை சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும் காரணத்தால், சில தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து இருப்பதால் நாம் தமிழர் கட்சி உடன் கூட்டணி அமைப்பது பற்றி தீவிரமாக ஆலோசிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது இப்போதைய சூழ்நிலையில் இரண்டு கட்சிகளும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.