பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த அந்த நபர்! மொத்த அரங்கமும் திகைத்து நின்ற நொடிகள்!

Photo of author

By Sakthi

கமல் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது பிக்பாஸ் குரல் இந்த இனிய நாளில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்திருக்கின்றார். அதன்பின்பு மாஸாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றார் நடிகர் கமல்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் என்று தெரிவித்த பிக்பாஸ் கமலிடம் ட்ரீட் கேட்டிருக்கின்றார்.

நான் எல்லோரையும் சமமாகவும் அவர்களுக்கு மரியாதையும் அளித்து தான் நடத்துகிறேன்.

அதையே தான் நானும் எதிர்பார்க்கிறேன் என்று பிக்பாஸ் இடம் கூறியிருக்கின்றார் கமல்ஹாசன், பாவம் கமலிடம் இருந்து பிக்பாஸ் கண்டிப்பாக இந்த பதிலை எதிர்பார்த்து இருப்பாரா என்பது சந்தேகம் தான்.

அதன்பின்பு அகம் தொலைக்காட்சி வழியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் கமலுக்கு போட்டியாளர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கமல்ஹாசன் அவர்களும் லவ் யூ ஆல் என கூறி வழக்கம் போல இந்த வாரம் அரங்கேறிய பிரச்சனைகளைப் பற்றி பேச ஆரம்பிப்பார் என்று தெரிகின்றது.

அதேவேளையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் அந்த நபர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.