கமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்! எதற்காக தெரியுமா?

Photo of author

By Sakthi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கூட எதிர்வரும் தேர்தலில் கமலஹாசனுக்கு கிடைக்கப்போவதில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் உடைய பிறந்தநாள் விழாவில் பேசிய வைகைச்செல்வன் வாடகை கேட்ட காரணத்தால் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக என்னிடம் வாடகை எதுவும் கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்தார். அதேபோல டிடிவி தினகரன் இதுவரையில் உலக அரசியல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே அரசியல்வாதி என்ற பெருமையுடன் திகழ்கிறார் என்று தெரிவித்தார்.

அதேபோல சமீபகாலமாக அதிமுகவை விமர்சனம் செய்து வரும் கமல்ஹாசனுக்கும், அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் ஷிவானி, ஆகியோருக்கு கிடைத்த வாக்குகள் கூட கமல்ஹாசனுக்கு எதிர்வரும் தேர்தலில் கிடைக்கப்போவதில்லை. ரம்யா பாண்டியனுக்கு நானே ஐந்து ஓட்டுக்கள் போட்டேன் என்று தெரிவித்த அவர் ,அந்தப் பெண் நல்ல பெண்ணாக தெரியும் காரணத்தால் 5 வாக்குகள் செலுத்தினேன். ஆனாலும் அரசியல் களம் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சி தளம் இல்லை இங்கே வாங்குவதை போல மூன்று கோடி நான்கு கோடி வாக்குகள் வாங்குவதற்கு என வைகைச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இதற்கு முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பேசியதற்கு, முதலமைச்சரும் பிக்பாஸ் பார்க்கின்றார் என்பது பெருமையாக இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அதேபோல இப்பொழுது வைகைச்செல்வன் பேசியிருக்கிறார் இது நகைப்புக்குரியது என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

அதோடு தொடர்ச்சியாக இப்படி இரு முக்கிய புள்ளிகள் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசி வருவதால் அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் தேடித் தருகிறார்களோ? என்று பேசிக்கொள்கிறார்கள்.