இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம்

இதுதான் இட ஒதுக்கீடா? ஐ.ஏ.எஸ் தேர்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசால் இழைக்கப்பட்ட அநீதி! கனிமொழி எம்பி காட்டம்

சமீபத்தில் வெளியான ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ பி எஸ் பதவிகளுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி தேர்வில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்ணை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட மதிப்பெண் குறைவாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திமுகவின் மக்களவை உறுப்பினரான கனிமொழி எம்பி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்(உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள்) தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண்களையே பெற்றுள்ளனர்.சமூக இடஒதுக்கீடு என்பது திறமைக்கு தரப்படும் நியாயமான அங்கீகாரம் என்று அதில் கூறியுள்ளார்.

Leave a Comment