தூத்துக்குடி மாவட்டத்தில் பல நலப் பணிகளை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அந்த மாவட்டத்திற்கு சென்றிருக்கின்றார்.
இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணியை வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் அரசு அதனை காதில் போட்டுக் கொள்ள மறுக்கின்றது.
இன்றைய தினம் தூத்துக்குடி போகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது சம்பந்தமாக உத்தரவை பிறப்பிப்பாரா என்று தன்னுடைய வலைதள பதிவின் மூலமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்தக் கேள்வியால், கனிமொழி எதற்காக இப்படி கேட்கிறார் என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். காரணம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதத்தின் போது அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியிருக்கின்றார்.
இது கூட தெரியாமல் கேள்விகேட்டு இருப்பதால் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கு இந்த விஷயம் கூட தெரியவில்லையா என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் விரைவான நடவடிக்கைகள் எடுத்து முதல்வர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம், படுகாயமடைந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும், அரசின் சார்பாக இழப்பீட்டுத் தொகையாக வழங்கி இருக்கின்றார்.
இந்த சம்பவம் நடந்த அதே ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் கலவரத்தின் போது காயமடைந்த குடும்பத்தார்களுக்கும் சேர்த்து அரசு வேலை என மொத்தமாக 19 பேருக்கு வருவாய் துறை, சமூக நலத்துறை, பேரிடர் துறை, சத்துணவுத் திட்டம் ஆகிய துறைகளில், உடனடியாக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இந்த விஷயம் கூட தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் முதல்வர் தூத்துக்குடி வரும் இந்த நாளில் அரசியல் செய்வதற்காக இப்படி செய்கிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் அந்த மாவட்ட மக்கள்.