திமுக எடுத்த அந்த முடிவு! இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

Photo of author

By Sakthi

சட்டமன்ற தேர்தல் லோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் திமுக எடுத்துள்ள முடிவால் காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்து இருக்கின்றது.

சென்ற வருடம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை இறுதி வெற்றி பெற்ற இவர் சமீப காலத்தில் நோய்த்தொற்று தாக்குதலுக்கு ஆளாகி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியாக இருக்கின்றது இப்போது கொரோனாவை காரணம் காட்டி அங்கே இடைத் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கின்றது. அதேநேரம் எதிர்வரும் சட்டசபை தேர்தல் கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகம் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரியில் திமுக மற்றும் அதிமுக வை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தது இதன் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக இந்நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அந்த தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது ஏனெனில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இருந்தாலும்கூட அவர்கள் கேட்கும் தொகுதியை கொடுக்கப் போவது இல்லை என்பதை திமுக மிக உறுதியாக இருக்கின்றது.

அதேபோல நாங்குநேரி தொகுதிக்கு அண்மைக்காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியை பிடிவாதத்தால் காங்கிரஸ் கட்சி தன்வசம் வாங்கியது ஆனாலும் அங்கு அதிமுக வேட்பாளர் இடம் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது அங்கே திமுக போட்டியிட்டிருந்தால் கூட ஆளும் தரப்பு வேட்பாளருக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்து இருக்கலாம் என பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. தேவையில்லாமல் ஒரு தொகுதியை திமுக இறந்துவிட்டதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன அதேநேரம் கடந்த காலங்களில் கன்னியாகுமரி தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றிருக்கின்றது.

ஆகவே கன்னியாகுமரி தொகுதியில் திமுக தங்களுக்கு விட்டுத்தர விரும்புமா என்கின்ற சந்தேகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்து வந்தார்கள் ஆனாலும்கூட அங்கே போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முன்னரே அந்த தொகுதியின் மீது கண்ணாக இருக்கும் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரூபி மனோகரன் விஜயதாரணி ஆகியோர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் கனவில் இருக்கிறார்கள் இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

அந்த நேரம் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேச்சு தொடங்கியது அதற்கு சட்டமன்ற தேர்தலில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி நமக்கு முக்கியம் கிடையாது என ஸ்டாலின் தெரிவித்ததாக கூறுகிறார்கள். அதோடு அது காங்கிரசின் சிட்டிங் தொகுதி என்ற காரணத்தால் அவர்களுக்கு ஒதுக்கி விடலாம் என்கின்ற ரீதியில் ஸ்டாலின் பேசியதாக தெரிவிக்கிறார்கள் இந்த தகவல் கசிந்து இருக்கின்ற நிலையில் காங்கிரஸ் கட்சியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனாலும் கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுப்பது போல் விட்டுக் கொடுத்து அதற்கு சமமாக சுமார் 6 சட்டமன்ற தொகுதிகளை திமுக காங்கிரஸிடம் கொடுக்காமல் திமுக வேட்பாளர்களை நிறுத்தி விடவும் கணக்கு போட்டு இருக்கிறது என்று விஷயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.