சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் பரப்பு! பாஜக-விற்கு பரப்புரை செய்த மற்றொரு நடிகர்!!

Photo of author

By Sakthi

சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல் பரப்பு. பாஜக-விற்கு பரப்புரை செய்த மற்றொரு நடிகர்.

இன்னும் சில தினங்களில் கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கட்சிக்கு ஆதராவக மற்றொரு நடிகர் பரப்புரை செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தலைவர்கள் பலரும் பரப்புரை மேற்கெண்டு வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் பாஜக கட்சிக்கு ஆதரவாக மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு நடிகர் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவாள்ளார்.

பிரபல நடிகர் பிரம்மானந்தம் அவர்கள் தான் பாஜக கட்சிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார். நடிகர் பிரம்மானந்தம் அவர்கள் கர்நாடக பாஜக கட்சியின் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான கே சுதாகர் அவர்களை ஆதரித்து சிக்கபல்லபூர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.