அதிமுகவை எப்படியாவது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று சசிகலா ஒருபுறம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறமோ அதிமுகவை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் ஒரு அதிகார மையமாக திகழ வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்து வருகிறார்.
இந்த அதிமுகவை கைப்பற்றும் போட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்து வருபவர் டிடிவி தினகரன். என்ன தான் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்தாலும், சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்கு இவர் உதவிகரமாக இருந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு டிடிவி தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஒரு முக்கிய காரணம். அதிமுகவின் கணிசமான வாக்குகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பக்கம் சென்றபடியால் அதிமுக நூலிழையில் தோல்வியை சந்தித்தது. இது தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை தான் அதிமுகவின் கட்சித் தலைவராக தேர்தல் ஆணையம் நியமனம் செய்திருந்தது. தற்போது அதிமுக செயல்படாத இயக்கமாக இருக்கிறது. 4 மாதத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தல் வைக்காததால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்று செல்வது தவறு என கூறியிருக்கிறார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனி முத்திரை பதிக்கும். பிரதமரை பணியில் ஒரு சிறப்பாக பணியில் ஈடுபடும் என்று கூறினார். கருணாநிதியின் குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் போல அனைத்து துறைகளிலும் நுழைந்து தங்களுடைய குடும்பம் தான் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் இவர்கள் சொல்லும் தேதியில் தான் திரைப்படத்தை வெளியிட வேண்டும். இவர்கள் சொன்னால்தான் வெளியிட வேண்டும். ஒரு சர்வாதிகாரம் போல செயல்பட்டு வருகிறார்கள். உண்மையாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் அரக்கனாக செயல்பட்டு வருகிறது. இதற்கு மிக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார்.