
TVK: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், முதல் முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அதே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய் மதியம் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரம் முடிந்த நிலையில் 41க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று இரவே முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று, ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் இறந்தவர்களின் குடும்பத்திற்கும் தலா 2 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு 50 ஆயிரமும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த மரணம் தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காத விஜய் நேற்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து இதயம் கானத்து போயிருக்கிறது நான் சந்தித்த எல்லா முகங்களும் என் மனதில் வந்து போகின்றன என்று ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் நிவாரணமாக தரப்படும் என்று அறிவித்திருக்கிறார்.