TVK DMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதற்கு விஜய் தரப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும் இது கரூரில் நடந்ததால், செந்தில் பாலாஜியின் சதி திட்டமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து எந்த ஒரு துக்க நிகழ்வுக்கும் வராத முதல்வர், இதற்கு மட்டும் உடனடியாக வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அடுத்து தமிழகத்தில் எவ்வளவோ ஊழல் நடந்திருந்தும், அதற்கு மும்முரம் காட்டாத தமிழக அரசு, கரூர் சம்பவத்திற்கு மட்டும் உடனடியாக தனி நபர் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. பின்னர் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, செந்தில் பாலாஜி கரூர் சம்பத்தை விவரிப்பதற்காகவே தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இவ்வாறு திமுக அரசு பதறுவதை பார்த்தால் இந்த சம்பவத்திற்கும் ஆளுங்கட்சிக்கு ஏதோ தொடர்பு இருக்கிறது என எதிர்கட்சிகள் உறுதிப்படுத்தின.
இந்நிலையில் ஆளுங்கட்சி அமைத்த தனி நபர் குழுவின் மேல் நபிக்கையில்லாத தவெக சிபிஐ விசாரணையை கோரியது. உச்ச நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. இதனால் ஆளுங்கட்சி பயத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கரூர் சம்பத்திற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் தான் என்று கூறப்பட்டுள்ளது.
அவர் தாமதமாக வந்தது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், வேண்டுமென்றே தாமதமாக வந்து, கூட்டத்தை அதிகப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் விஜய் செயல்பட்டதாகவும் கூறினார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், திமுக அரசு ஏன் இவ்வளவு பதற்றமாக விஜய் மீது தவறு உள்ளது என்பதை நிரூபிக்க போராடுகிறது என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வரும் விஜய் காலதாமதமாக வந்தது தான் காரணம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.