கரூர் மாரியம்மன் கோவில் வரலாறு!

Photo of author

By Sakthi

பழமையும், புகழும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக பெருமையும், கொண்ட நகரம் கரூர் இத்தகைய சீரும் சிறப்புமிக்க கரூரில் முக்கிய திருவிழா கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஏழை, பணக்காரர், என்ற பேதமின்றி சாதி சமய வித்தியாசம் எதுவுமில்லாமல் எல்லோராலும் விரும்பி அன்புடன் வணங்கப்படும் தெய்வமே கரூர் மாரியம்மன்.

தற்போது அந்த கோவிலின் வரலாறு பற்றி காணலாம், அந்த கோவிலின் வரலாறு சுவாரஸ்யங்கள் மிகுந்ததாகும் என சொல்லப்படுகிறது. கோவிலின் பரம்பரை அறங்காவலர் கனவில் மாரியம்மன் சிறுமி வடிவில் தோன்றி எனக்கு கரூரில் ஒரு குடிசை இல்லையே என்று ஏக்கத்தை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

எதுவும் புரியாத அவர் விளக்கம் கேட்க குழந்தை மாரியம்மன் எதிர்க்கரையிலுள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று பார் புரியும் என தெரிவித்து அதன்பிறகு மறைந்துவிட்டார் என சொல்லப்படுகிறது.

அந்தப் பெரியவர் அதனடிப்படையிலேயே தான்தோன்றி மலை கிராமத்திற்கு சென்று அங்கு பார்த்தபோது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு கோலாகலமாக இருந்தது. விஷயத்தை புரிந்து கொண்ட அந்த பெரியவர் உடனடியாக ஆதி மாரியம்மன் கோவிலிலிருந்து பிடிமண் எடுத்து வந்து கோவிலை கட்டினார் என சொல்கிறார்கள்.

அன்று முதல் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள். அதோடு கோவிலை நன்றாக பராமரித்து வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் தன்னிகரில்லாத மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகவும் அமையப்பெற்ற பெருமை கொண்ட இந்த திருத்தலத்தில் உலக நாயகியாம் அன்னை சக்தி ஈசான மூலையை நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.

மாரியம்மன் விழாவின்போது வேப்பமரத்தின் ௩ கிளைகளுடைய பகுதியை வெட்டி எடுத்து வந்து, மஞ்சள் பூசி வேப்பிலையால் அலங்காரம் செய்து, பூஜை ஆராதனையுடன் அமராவதி ஆற்றிலிருந்து கம்பத்தை எடுத்து வருவார்களாம்.

ஆலயத்தில் பலிபீடத்தின் அருகில் நடத்தப்படும் கம்பத்தை பக்தர்கள் ஸ்வாமியாக கருதி வணங்கி செல்வார்கள். கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் தினங்களில் அன்றாடம் மாலை சாயரட்சைவனுடன் வைக்கப்பட்டுள்ள சக்தியையும் வைத்து பூஜை செய்வார்கள்.

கோவிலில் நடப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் ஈர ஆடையுடன் மஞ்சள் நீரை வேப்பிலையுடன் எடுத்து வந்து அபிஷேகம் செய்வார்கள். கம்பம் ஆற்றுக்கு செல்லும் நாள் வரையில் பக்தர்கள் நாள்தோறும் மஞ்சள் நீரூற்றி வணங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.