காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

Photo of author

By Hasini

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

Hasini

Kashmir gets independence after three years! You know what?

காஷ்மீரில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுதந்திரம்! எதற்கு தெரியுமா?

ஜம்மு – காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசத்தில் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் முடக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். காரணம் என்னவெனில் இணையதள சேவை மூலம் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இருந்தாலும் சில இடங்களில் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட இதே நிலைதான் கடந்த ஆண்டு வரை நீடித்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக சுதந்திர தின நாளான இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இணைய சேவை எங்கும் முடக்கப்படவில்லை.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு பதற்றமான பகுதிகளில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப் பட்டுள்ளது. அதே போல் அருகில் உள்ள ஸ்ரீ நகர் முழுவதும் மக்கள் நடமாட்டத்திற்கும் எந்த கட்டுப்பாடுகளும் இன்று விதிக்கப்படவில்லை. அதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியில் இருந்ததும் குறிப்பிடத் தகுந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. கடந்த  2018 ஆம் ஆண்டு கவர்னர் ஆட்சி அமலில் இருந்தபோது கூட காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்படாமல் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.