அடுத்த முல்லை வந்தாச்சு!

0
263

சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களுடைய மரணம் சித்ராவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது. மக்கள் தொலைக்காட்சியின் மூலமாக திரைத்துறைக்கு வந்து மிகப்பெரிய இடைவேளைக்குப் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கினார் நடிகை சித்ரா.

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் பரபரப்பான ஈவிபி கார்டனில் நடந்து வருகின்றது. ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு நசரத்பேட்டை இருக்கின்ற தனியார் விடுதிக்கு சென்றபோதுதான் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆர்.டி.ஓ மற்றும் காவல்துறையினர் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள் எதற்காக நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்தை முழுமையாக இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. என்றுதான் சொல்ல வேண்டும் ஆனாலும் தீவிரமான விசாரணைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பில் அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இறந்த சித்ரா புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.சித்ராவிற்கு பதிலாக அந்த தொடரில் முல்லை எனும் கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போவது என்ற கேள்வி ரசிகர்கள் இடையே மிகப்பெரிதாக எழுந்திருக்கிறது. ஏனென்றால், சித்ராவையே முல்லையாக பார்த்து பழகிவிட்டார்கள் ரசிகர்கள். சித்ராவும் முல்லையாகவே வாழ்ந்துவிட்டார்.அவ்வாறு இருக்க அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டு வந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வாரா என குழம்பிப்போய் இருக்கிறது நிர்வாகம்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சித்ராவிற்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில், காவியா அறிவுமணி நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார். யார் இந்த காவியா என்று கேட்டால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின் மூலமாக, பிரபலமடைந்தவர் என்று தெரிவிக்கிறார்கள் சித்ராவிற்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இப்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகின்றார்.

Previous articleபாஜகவை கலாய்த்த கமல்ஹாசன்!
Next articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 17-12-2020 Today Rasi Palan 17-12-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here