DMK: திமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்டு வருபவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ளார். இதற்கான விசாரணை தற்போது நடந்து வரும் சூழலில், செந்தில் பாலாஜி மீதான எதிர்ப்புகள் திமுகவின் உள்வட்டாரத்தில் கிளம்பியுள்ளன. சமீபத்தில் செந்தில் பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அப்போது திமுகவை சேர்ந்த சிவபாலன் என்பவர், செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்த போது அந்த வாழ்த்து மடலில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படங்கள் சிறியதாக இருந்தது. இதனை கண்டு ஆத்திரமடைந்த, என்.கே.கே.பி ராஜா திமுக காரனா இருக்கணும்னு யோசிங்க, திமுகவின் கம்பீரத்தை சிதைத்து விடாதீர்கள் என்று கடுமையாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு முன் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செந்தில் பாலாஜி தாமதமாக வந்ததற்கு திருச்சி சிவா மிகவும் கோபப்பட்டார். இவர்களின் இந்த செயல்பாடுகளை பார்த்தால், திமுக உள் வட்டாரத்திலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக கழக குரல் எழுந்துள்ளது என்பது நிரூபணமாகிறது. செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கை அவருக்கு எதிராக உள்ளவர்கள் சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது.

