நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கும், எந்த ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் உகந்த நேரம் என்றால் அது பிரம்ம முகூர்த்த நேரம் தான். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எந்த செயலை செய்தாலும் அல்லது எந்த வேண்டுதல்களை கூறி கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4:30 மணி முதல் சூரிய உதயம் வரையிலும் இருக்கும். அதாவது 6 மணி வரையிலும் இருக்கும். வீட்டில் உள்ள பெண்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.
அதேபோன்று இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் அஷ்டலட்சுமிகளின் வருகையும் நமது வீட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், நமது வீட்டின் கதவை திறந்து வைக்க வேண்டும். காலை 6:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் நமது வீட்டின் கதவு சிறிது நேரம் ஆவது திறந்து இருக்க வேண்டும்.
ஏனென்றால் அதிகாலையில் சூரியன் உதயம் ஆகும் நேரமும், சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரமாகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது ஒரு மந்திரத்தை 8 முறை உச்சரித்து, அதன் பிறகு நமது வீட்டின் கதவை திறந்தால் அஷ்டலட்சுமிகளின் வருகையும் நமது வீட்டிற்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஒரு வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், அந்த லட்சுமி கடாட்சம் வெறும் பணத்தால் மட்டும் கிடைத்து விடாது. பணத்தோடு சேர்த்து மற்ற ஐஸ்வர்யங்களும் ஒரு குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும். அதை தான் அஷ்டலட்சுமி கடாட்சம் என்று சொல்லுவார்கள்.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடிய லட்சுமி, அஷ்டலட்சுமி. இந்த எட்டு வகையான செல்வமும் ஒரு வீட்டிற்கு நிறைவாக கிடைத்துவிட்டால் போதும். அந்த வீட்டு சந்தோஷம் முழுமை அடையும். உங்களுடைய வீட்டில் தினமும் அஷ்டலட்சுமிகளின் வருகை இருக்க வேண்டும் என்றால், தினம் தினம், காலையில் வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை மட்டும் எட்டு முறை சொன்னால் போதும்.
அதாவது நிலை வாசல் கதவை திறக்கும்போது அஷ்ட லட்சுமிகளும் வீட்டிற்குள் வருகை தர வேண்டும் என்று சொல்லிவிட்டு “ஸ்ரீம்” என்ற வார்த்தையை எட்டு முறை சொல்ல வேண்டும். ஒவ்வொரு மகாலட்சுமிக்கும் ஒவ்வொரு ஸ்ரீம் என்ற வார்த்தையை சொல்லும்போது அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு கிடைக்கும். அஷ்டலட்சுமிகளின் வருகை உங்களுடைய வீட்டில் இருக்கும்.
தினம் தினம் இந்த வார்த்தையை சொல்லி வாசல் கதவை திறக்கும் போது அஷ்டலட்சுமிகளும் சந்தோஷமாக உங்கள் வீட்டிற்குள் நுழைவார்கள். காலப்போக்கில் அஷ்ட லட்சுமிகளும் உங்கள் வீட்டு வாசலிலேயே நிலையாக தங்கி, உங்களுக்கு தேவையான ஐஸ்வர்யங்களை கொட்டிக் கொடுக்க துவங்கி விடுவார்கள்.