இன்று இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்று தீய சக்திகளின் தாக்குதல்கள் தான். ஏனென்றால் இந்த தீய சக்திகளின் தாக்குதல்களால் தான் தொழில் முன்னேற்றத்தில் தடைகள், குடும்பத்தில் பிரச்சனைகள், நோய்வாய்ப்படுதல் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் குடும்ப நிம்மதியும் இழக்கப்படுகிறது.
இந்த தீய சக்திகள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம் வந்து விடுவதால் தான் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறோம். நம்மை எதிரிகளாக நினைக்கக் கூடியவர்கள் நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்பதற்காக பில்லி, சூனியம், ஏவல் இது போன்றவைகளையும் ஏற்படுத்தி விடுகின்றனர்.
நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சிறிது முன்னேற்றத்தை கண்டோம் என்றால், அதனைக் கண்டு பல பேர் பொறாமை கொள்வார்கள். இதனால் அளவுக்கு அதிகமான கண்திருஷ்டிகள் நமது குடும்பத்தின் மீதோ அல்லது தொழிலின் மீதோ ஏற்படும்.
இதனால் தொழில் முன்னேற்றத்தில் தடைகள், வாழ்க்கையில் பிரச்சனைகள், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், நோய்வாய்ப்படுதல் இது போன்றவைகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதிலிருந்து நாம் தப்பிக்க ஒரு பொருளை நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம், எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் நம்மை நெருங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பிறந்த குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க கூடிய முக்கியமான பொருட்களுள் ஒன்றும் வசம்பு. இந்த வசம்பு பொடியினை நமது வீடு முழுவதும் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்களில் தெளிக்கலாம். எப்பேர்பட்ட தீய சக்திகளையும் விரட்டக்கூடிய பண்பு இந்த வசம்பிற்கு உண்டு.
அதேபோன்று வசம்பு, சாதிக்காய், அகில், சந்தனம் ஆகியவற்றை பன்னீருடன் சேர்த்து நமது நெற்றியில் திருநீராக வைத்துக் கொள்ளலாம். இந்த நான்கு பொருட்களையும் வாங்கி ஒரு கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கடைகளில் பொடிகளாக கிடைக்கும் அதனையும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நான்கு பொடிகளையும் பன்னீருடன் கலந்து நெற்றி, பின் கழுத்து பகுதி, கழுத்து குழி, நெஞ்சு குழி, இரண்டு தோள்பட்டைகள், உச்சந்தலை,தொப்புள் குழி ஆகிய அனைத்து இடங்களிலும் வைத்துக் கொள்ளலாம்.
ஏதேனும் ஒரு கிரகம் நம்மை தாக்குகிறது என்றால் முதலில் தொப்புள் பகுதியை தான் தாக்கும். எனவே அந்த இடத்திலும் இந்த திருநீரை வைத்துக் கொள்வதால் கிரகங்களின் தாக்குதல்களில் இருந்தும் விடுபடலாம்.
இந்த பொடியினை பன்னீருடன் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு, நாம் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் நமது நெற்றியில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு தீய சக்திகளும் நம்மை நெருங்காது. இதனை நமது உடம்பில் வைத்துக் கொண்ட ஆறு மணி நேரத்திற்கு எந்த ஒரு தீய சக்திகளும் நம்மை நெருங்காது.