கேரளாவை கலாய்த்த உத்தரப்பிரதேச முதல்வர்! ஒரே பதிலில் வாயடைக்க வைத்த பினராயி விஜயன்!

Photo of author

By Sakthi

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக விளங்குவது உத்திரபிரதேசம் இந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.நாட்டிலேயே 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது உத்தரபிரதேசத்தில் மட்டும்தான்.

ஆனால் அங்கு பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இந்து மக்கள் அதிகம் என்பதாலும், பாஜக இந்துத்துவா கொள்கையுடைய கட்சி என்பதாலும், அங்கே பாஜக வலுவாக காலூன்றியிருக்கிறது .அதோடு மற்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கான பெரும்பாலான வசதிகள் உத்தரபிரதேசத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், உத்திரப்பிரதேச பாஜகவின் வாக்குறுதிகள் தொடர்பாக அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் உத்தரப்பிரதேச வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும். இதை செய்ய தவறிவிட்டால் உத்திரப்பிரதேசம் கேரளா மற்றும் மேற்கு வங்கம் போல மாறிவிடும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னுடைய வலைதளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, கேரளாவைப் போல உத்திரபிரதேசம் மாறிவிடுமோ என்று யோகி ஆதித்யநாத் பயம் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு மாறிவிட்டால் சிறந்த கல்வி, சுகாதாரம், சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்டவை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு கிடைக்கும். சமூக நல்லிணக்கம் உண்டாகும். மதம் மற்றும் சாதியின் பெயரால் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதைத்தான் அந்த மாநில மக்களும் விரும்புவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்